அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

0
260

அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

பரபரப்பு மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இங்கிலாந்தில் நடைபெற்று வந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் முதல் முறையாக உலக கோப்பையை வென்று இங்கிலாந்து ஒரு புதிய சாம்பியனாக மாறியுள்ளது , கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது, இதற்கு முன்னர் நடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது அதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. 2023 ஆண்டு நடைபெறும் அந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக்கோப்பையை இந்தியா தான் நடத்த உள்ளது. இந்த முடிவு கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே அல்லது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியே வெற்றிபெறும் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அடுத்த உலக்கோப்பையை நடத்தவுள்ள இந்தியாவிற்கு சாதகமான சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது

Previous articleஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்! பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி
Next articleநடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்