3 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

0
381
#image_title

3 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோடா உட்பட 7 இடங்களில் பி.எப்.ஐ அமைப்புக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வன்முறையை தூண்டும் பிரசுரங்கள், ஆயுதங்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் தற்போது பஞ்சாப், டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளையும், சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Previous articleதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Next articleட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here