Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்!

Photo of author

By Divya

Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்!

கண்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளில் ஒன்று மாலைக்கண் நோய்.இவை வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது.இதை நோய் என்று சொல்வதை விட ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லலாம்.இந்தியவாவில் மாலைக்கண் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மாலைக்கண் நோய் பாதித்தவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாமல் போய்விடும்.பலவீனமான பார்வை திறன் மற்றும் இரவு நேரத்தில் மங்கலான பார்வை உண்டாகும்.

மாலைக்கண் நோய் இயற்கை மூலிகை வைத்திய குறிப்புகள்:

தீர்வு 01:

கீழா நெல்லி
பொன்னாங்கண்ணி
மூக்கிரட்டை

இந்த மூன்று மூலிகைகளையும் சம அளவு எடுத்து நன்கு காய வைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த மூன்று பொடியையும் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் மாலைக்கண் நோய் பாதிப்பு மெல்ல மெல்ல குணமாகும்.

தீர்வு 02:

வல்லாரை

ஒரு கைப்பிடி அளவு வல்லாரை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சூடான பாலில் போட்டு கலந்து குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் மாலைக்கண் பாதிப்பு மெல்ல மெல்ல குணமாகும்.

தீர்வு 03:

பப்பாளி
கேரட்

ஒரு கீற்று பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கேரட்டை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பப்பாளி மற்றும் கேரட் துண்டுகளை போட்டு காய்ச்சிய பால் ஒரு கிளாஸ் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் மாலைக்கண் பாதிப்பிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.