தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

Photo of author

By Rupa

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

கொரோனா சென்ற வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை துரத்தி பரவி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

அதிக அளவு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.தமிழ்நாட்டில் 8000  ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.அந்தவகையில் இந்தியாவில் ஓர் நாளில் மட்டும் 1,027 பேர் உயிரிழந்துள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் கட்டுபாடுகளுடன் கூடிய செயல்பாடுகளை நடைமுறைபடுத்தியுள்ளனர்.அப்போதும் கொரோனா தொற்று பரவுவது குறையவில்லை.அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகராஷ்டிராவில் தற்போது 144 தடை உத்தரவு போட்டுள்ளனர்.

அதற்கடுத்து நம் தமிழ்நாட்டில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் இரவு ஊரடங்கு போடப்படும் என சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் யிடம் கேட்டபோது அவர் கூறியது,இரவு ஊரடங்கு பற்றி தற்போது என்னால் கூற முடியாது என்று தெரிவித்தார்.அந்தவகையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று மேற்கொண்டு பரவாமல் இருக்க அரசு கூறும் அனைத்து  நடவடிக்கைகளை கடைப்பிடித்து ஒத்துளைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அலுவலங்களில் வேலை செய்பவர்கள் முடிந்தவரை வீட்டினுலே இருந்து பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.தேவை கருதி மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்.தேவை இல்லா காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.