புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

0
79

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொன்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை ஒன்றாம் தேதி உலக தமிழர்கள் எல்லோராலும் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்றைய தினம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிலவ வருஷம் பிறந்தது. அதனை உலகத் தமிழர்கள் எல்லோரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள். அதாவது ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அளவிற்கு உலகம் முழுவதும் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. தமிழ் புத்தாண்டை பொருத்தவரையில் தமிழர்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் உலகில் எங்குமே இல்லாத வழக்கமாக இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் மட்டும்தான் ஆங்கில வருடமோ அது தமிழ் வருடமோ எந்த வருடம் பிறந்தாலும் அந்த வருடத்தின் பயனை சரியாக கணித்து நம்முடைய முன்னோர்கள் பஞ்சாங்கத்தில் எழுதிவைத்துவிட்டு சென்றிருப்பார்கள். அதனை படித்து தெரிந்து கொண்டு அதன் வழியாக எதிர்வரும் வருடத்தில் நம்முடைய பலன் எப்படி இருக்கும் என்பதை பொது மக்கள் கணித்துவிடுவார்கள்.

பிலவ வருடம் ஆன இந்த வருடம் பூமிக்காரகனாகிய செவ்வாய் ராஜாவாக அமைந்திருப்பதால் மழை பெய்து பயிர்கள் வளர்ந்து பூமி சுபிட்சம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தாண்டின் பலனை பொறுத்தவரையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆட்சியே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் புது புது நோய்கள் உருவாகும் கால்நடைகளுக்கும் வியாதிகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மருத்துவத் துறையில் பல சாதனைகளை புரிந்து வியாதிகள் எல்லாவற்றிற்கும் புதிய தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கல்வித் துறையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அண்டை நாடுகளின் போர் முயற்சிகள் முறியடிக்கப்படும், அதோடு இந்த வருடம் 12 புயல்கள் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவற்றில் 9 புயல் இந்தியாவை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மீண்டும் சென்னை வெள்ளத்தால் மிதக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் ஆனால் நிச்சயமாக மழை பொழியும் என்று பொதுவான கருத்து ஒன்று இருக்கிறது. அதிமுக எப்போது ஆட்சியில் அமர்ந்தாலும் சரி நிச்சயமாக மழை பொழிந்து பூமி செழிக்கும் என்பது தான் கடந்த கால வரலாறு அதனை மனதில் வைத்துதான் பொதுமக்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள் ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் நிச்சயமாக மழை பொழிவது கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது.