தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்றானது மெல்ல மெல்ல குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தரவு அலகு அறையை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
சித்தா, ஆயுர்வேதத்துடன் கூடிய 1542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறினார். ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஆகியவற்றின் மருத்துவ செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக Data Cell அறிமுகபடுத்தபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வருகிற 31ஆம் தேதி மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.