தனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

0
201

நித்யானந்தா சில காலத்திற்கு முன்பு தனித்தீவு வாங்கி உள்ளதாகவும் அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுவந்தனர்.ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் நிஜமாக்கியுள்ளார் நித்தியானந்தா.

சில வருடங்களுக்கு முன் பெங்களூரு மாநில காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் கைலாசம் என்றும் ஒரு புதிய தீவை உருவாக்கி அங்கேயே தங்கி உள்ளார் என்று தெரியவந்தது.

தற்பொழுது கைலாச என்ற ஒரு தீவினை முழுமையாக உருவாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.மேலும் கைலாசா தீவு நாட்டுக்கு எப்படி வரவேண்டும்,அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை நித்யானந்தா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபகாலத்தில் நித்தியானந்தாவிற்கு நிறைய நன்கொடை வந்துள்ளதால், அதனை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு புதிய வங்கியை தொடங்கி இருப்பதாக கூறினார்.

வாட்டிகன் வங்கியை ஒரு மாதிரியாக வைத்து ‘ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா’ என்று ஒரு வங்கியை தொடங்கி வைத்துள்ளார். அதற்கான 300 பக்க அறிக்கையை உருவாக்கி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

கைலாச நாட்டிற்கு தனி நாணயம் அச்சிட்டு வருவதாகவும், விரைவில் நாணயம் வெளியிடப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.இவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளனர்.

மேலும் , இதற்கான அடுத்தகட்ட அறிக்கையை வரும் விநாயகர் சதுர்த்தியன்று நித்யானந்தா வெளியிடப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Previous articleஇரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்
Next articleஹீரோயின்லாம் ஓரகட்டும் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!! வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்!!