தேன் சுவையா…! தெய்வீக சுவையா..! கடலுக்கு நடுவே பஜனை பாடும் நித்தி குரூப்; தொடரும் தேடுதல் வேட்டை..!!

0
186

தேன் சுவையா…! தெய்வீக சுவையா..! கடலுக்கு நடுவே பஜனை பாடும் நித்தி குரூப்; தொடரும் தேடுதல் வேட்டை..!!

ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு சம்பந்தமாக நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல சாமியார் நித்தியானந்தா இருக்கும் இடம் தற்போது ரகசிய தகவலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. வெளிநாடு தப்பி ஓடிய நித்தியை கைது செய்வதற்காக குஜராத் காவல் துறையினர் சர்வதேச போலீசாரை நாடினர்.

இதனையடுத்து, நித்தி எந்த நாட்டில் பதுங்கியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க சர்வதேச காவல்துறையினர் தற்போது புளூ கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக நித்தி தலைமறைவாக இருக்கும் இடம் கசிந்துள்ளது? நித்தியானந்தா புதிய கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு கரீபியன் தீவுகளில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை காவல்துறை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், பசிபிக் நாட்டின் வனுவாட்டு என்னும் தீவில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாகவும், அங்கு இருக்கும் வங்கியில் புதிய கணக்கை துவங்கி மொத்த பணமும் வைத்திருப்பதாகவும் ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக பூஜைக்காக கட்டணம் செலுத்தும் விவரங்களை இணையத்தில் ஒருவர் தேடியபோது, நித்தியின் நம்பிக்கையாளர் ஒருவர் அனுப்பிய இமெய்ல்-ல் சிறப்பு பூஜைக்காக பணத்தை செலுத்த வனுவாட்டு நேஷ்னல் வங்கியின் போர்ட் விலா பிராஞ்ச்சில், கைலாசா லிமிடெட் என்கிற பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வனுவாட்டு பேங்க்கின் வங்கி கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வங்கியில் முதலீடு செய்தால் சொத்துவரி, வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்ற எந்த வரியும் செதுத்த வேண்டிய அவசியமில்லை. வங்கி அக்கவுண்ட் தொடங்கும் நபர்களை பற்றி வெளியே தகவல் தெரிவிக்காமல், ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நித்தியானந்தா விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Previous articleகுழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !
Next articleஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!