நிதீஷ் ரெட்டி அதிரடி நீக்கம்..உள்ளே வரும் 2 ஸ்பின்னர்கள்!! வெற்றி பெறுமா இந்தியாவின் திட்டம்??

0
484
nitish-reddy-action-removal
nitish-reddy-action-removal

cricket: இந்திய அணி நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உடனான 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ் ரெட்டி நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் நாளை 4 வது போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் மற்றும் ஜெயஷ்வாளுக்கு அடுத்து நிதீஷ் குமார் ரெட்டி அதிக ரன்களை அடித்த நபராக இருக்கிறார். மேலும் இந்த நான்காவது போட்டியில் இவர் நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் தோல்வியடையவில்லை. இதில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி ஸ்பின்னர்கள் தான் அதிகம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் இணை சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வரும் நிதீஷ் ரெட்டியை நீக்கிவிட்டு 2 ஸ்பின்னர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 வது போட்டியில் ஜடேஜா சரியாக பந்து வீசவில்லை என்றாலும் பேட்டிங் அபாரமாக செய்து அடுத்த போட்டியில் தவிர்க்க முடியாத வீரர் ஆனார். மேலும் வாஷிங்டன் சுந்தர் உடன் சேர்த்து இரு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleஅண்ணாமலையை ஓரங்கட்டுங்க.. திமுக வை வீழ்த்த கட்டாயம் அதிமுக-வுடன் தான் கூட்டணி!! எடப்பாடியை நெருங்கும் பாஜக!!
Next articleஇவர்களெல்லாம் கிரெடிட் கார்டு வாங்கினால் சிக்கல்!! எச்சரிக்கை விடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!