cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் போட்டியில் கலந்து கொண்ட நிதீஷ் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரின் 4 வது போட்டியில் மூன்றாவது நாளாக இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இன்று நடைபெற்ற போட்டியில் சிராஜ் பேட்டிங் செய்ய வந்த போது அவருக்காக நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு தற்போது பெசுபோருளாகியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது இந்திய அணி. ஏற்கனவே 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 போட்டி தொடங்கியது.
இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 474 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கி இந்திய அணி தடுமாறி வந்தது. தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவர் ரன் அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இருந்த நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இதில் நிதீஷ் ரெட்டி 99 ரன்களில் நான் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஸ்ட்ரைக்கில் விளையாடிய பும்ரா விக்கெட் ஆனார். அடுத்து களமிறங்கிய சிராஜ் இன்னும் 2 பந்துகள் விக்கெட் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நிதீஷ் ரெட்டி சதம் அடிக்க முடியும் என அவரின் தந்தை இறைவனை வேண்டி கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.