cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் பொளந்து கட்டி வரும் நிதிஷ்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரின் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தற்போது 3 வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முடித்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
நேற்று முன் தினம் தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 474 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மித் அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி தொடக்கத்தில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை என்ற நிலையில் இருந்தது. மூன்றாம் நாள் இன்று தொடங்கிய போட்டியில் ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இணை சிறப்பாக விளையாடி ரங்க சேர்த்து வருகிறது. இதில் நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களிலும் நிதிஷ் குமார் ரெட்டி 85 ரன்களிலும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது 326 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.