5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை! 

0
206
No. 5 storm warning cage boom! Fishermen continue to be banned from going to sea!
No. 5 storm warning cage boom! Fishermen continue to be banned from going to sea!

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சற்று முன்பு தீவிரமடைந்துள்ளது அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது.மேலும் கடலோர பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசுகின்றது.அதனால் கடலூர் துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் புயலினால் கடல் சீற்றம் அதிகம் உள்ளதால் நான்காவது நாளாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.மேலும் கடலுக்கு அருகில் உள்ள பாதைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதனை விரைவில் சரிசெய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.

Previous articleகனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 
Next articleBreaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்!