சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

0
179
No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!
No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர்.

அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அதிமுக இனி தனித்து நிற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த கூட்டணி முடிவானது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்பொழுது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, நாங்கள் பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் கிளம்பி விட்டது.

ஏனென்றால் பாஜக உடன் இருந்ததால் சிறுபான்மை மக்கள் உடனான உறவானது சற்று இடைவெளி விட்டே காணப்பட்டது. தற்பொழுது பாஜக உடனான கூட்டணி ஆனது முடிவடைந்த நிலையில் சிறுபான்மையினர் பலர் தங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனை சற்றும் முதல்வரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல பாஜகவிற்கு எதிராக திரும்பிய இந்தியா என்ற கூட்டணி நிலைக்குமா என்பது காலம்தான் பதில் சொல்லும் என்ற பாணியில் கூறினார்.

அதேபோல திமுக ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள சொத்தை பாதுகாக்கவும் மேற்கொண்டு சேர்க்கவுமே இவர்களுடன் கூட்டணி அமைத்து கொள்வார். அதேபோல அதிமுக தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி வைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இவ்வாறு கூறியதை அடுத்து சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு கூட்டணி கட்சிகளில் ஏதேனும் மாற்றம் உண்டாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous articleநிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!! 
Next articleபெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!!