வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு.
பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த பொழுது ஏழை மக்களுக்கு பசியை போக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனங்கள், அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம்.ஆனால் தற்போது மக்களுக்கு உதவும்படியான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.நான்காவது முறையாக திமுக அரசு இந்த பட்ஜெட்டில் கவர்ச்சி வார்த்தைகளைத்தான் தான் அதிகம் கூறியுள்ளது.
அதிமுக ஆட்சியை விட இப்பொழுது அதிக வருமானம் தான் வருகிறது ஆனால் எந்த திட்டங்களும் முறையாக அறிவிக்கப்படவில்லை.மாறாக கடன்தான் அதிகம் உள்ளது. கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்து இளைஞர்களிடம் வாக்குகளை பெற்று விட்டு இன்றுவரை அதை செய்யவில்லை.” என்றார்.