தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

0
202
Jayalalitha's jewels returning to Tamil Nadu! Karnataka special court order!
Jayalalitha's jewels returning to Tamil Nadu! Karnataka special court order!
தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.கடந்த1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் உள்ள அவரது தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.ஜெயலலிதா செத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அவரது உடைமைகள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் ஜெயலலிதாவின் நகைகள் ஏலம் விடப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை அடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்யப்படுவது தான் உகந்ததாக இருக்கும் எனக் கூறி உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், செருப்புகள் என 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
author avatar
Preethi