அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் ஏதும் வரவில்லை!! பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!!

Photo of author

By Gayathri

இந்து கோவில்களில் நியாயமான முறையில் அறங்காவலர் பணிக்கான நியமனம் நடைபெறவில்லை என்று இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

மேலும் இந்த வழக்கானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் வழக்கறிஞர் குமணன் கோயில்களின் விவரங்களை தாக்கல் செய்தார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறை வரம்புக்குள் மொத்தம் 31,163 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும், அதில் 10,563 விண்ணப்பங்கள் தகுதியுடையவர்களிடம் இருந்து பணி நியமனம் கோரி வந்ததாகவும் அறிவிப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் கோரியபோதும் 20,600 கோயில்களில் விண்ணப்பங்கள் ஏதும் இன்று வரை வரவில்லை என்று அதன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கினால் 1,284 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க முடியாத நிலையில் வழக்குகள் நடப்பதாகவும், நியமனங்களைத் தொடர இந்த வழக்குகள் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7661 கோவில்கள் உள்ளன. இதில் 2,902 கோயில்களில் அறங்காவலர் நியமனங்களை இறுதி செய்யும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.