சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

0
151

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டில் குடியுரிமை பெற 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பறி போனாலும் பிரச்சனை இல்லை என்றும் எங்கள் தலைவர் நித்தியானந்தா கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டிற்கு நாங்கள் சென்று விடுவோம் என்றும் நகைச்சுவையாக கூறினார்.

சீமானின் இந்த நகைச்சுவை பேச்சை சீரியசாக எடுத்துக் கொண்ட நித்தியானந்தா தரப்பு கைலாஷ் நாட்டின் பிரதமர் அலுவலகம் என்ற டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார். கைலாஷ் நாடு என்ற ஒன்று இல்லை என்று ஈக்வடார் நாட்டின் அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையிலும் கைலாஷ் என்ற நாடு இருப்பது போல தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா தெரிவிக்கும் கருத்துக்கள் சீமானின் நகைச்சுவையை விட பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleஇதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்
Next articleகபாலிக்கு பின் மீண்டும் ரஜினி படத்தில் இணைந்த நடிகர்!