வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை
உலகம் முழுவதும் கொவிட்-19 என்ற வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கான சரியான மருத்துவம் தெரியாமல் உலகநாடுகள் விழி பிதுங்கி வருகிறது. சுமார் 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதுவரை சமார் 12000 மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.
இவ்வாறான ஒரு மிகப்பெரிய பாதிப்பை உலகநாடுகள் சந்நித்து வரும் நிலையில் வடகொரியா மட்டுமே இந்த வைரசின் பாதிப்பு குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. அந்த நாட்டின் அனைத்து தனியார் ஊடகங்களையும் அரசு கட்டுப்படுத்தி அரசின் ஊடகங்கள் மட்டுமே இதுநாள் வரை செய்திகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகிறது.
சீனா மற்றும் தென்கொரியாவிற்கு மிகவும் அருகிலே உளள நாடு வடகொரியா. அந்த நாட்டிற்கு எவ்வாறு கொரோனா வைரஸ் பரவாமல் உள்ளது என உலகநாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து வடகொரியாவின் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சீனாவில் பாதிப்பு தொடங்கியபோதே வடகொரியா மற்ற நாடுகளுடனான ஏற்றுமதி இறக்துமதியை நிறுத்தி நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டதாகவும் அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளிநாட்டு தூதரகங்களையும் தனிமைப் படுத்தியதாக தெரிவித்துள்ளது.
ஆனாலும் இவ்வாறான நடவடிக்கைகளால் ஒருவர் கூட பாதிக்காத நிலையில் ஒருநாடு இருக்க முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது உளவுத்துறை.