அடுத்த 6 மாதத்திற்கு மின்கட்டண திருத்தம் கிடையாது!! மின்சார வாரியம்!!

Photo of author

By Gayathri

அடுத்த 6 மாதத்திற்கு மின்கட்டண திருத்தம் கிடையாது!! மின்சார வாரியம்!!

Gayathri

No electricity bill revision for next 6 months!! Electricity Board!!

இலங்கை மின்சார வாரியத்தில் தற்பொழுது, மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் மேலும் ஆறு மாத காலங்களுக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும் என இலங்கையின் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையானது, நேற்று மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் இலங்கை மின்சார சபையானது சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்த நிலையில் மீண்டும் மின் கட்டணம் தொடர்பான சில முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணம் குறித்து அணைக்குழுவின் அறிவுரை :-

அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும் கருத்தில் கொண்டு கட்டண திருத்த முன்மொழிவை திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.மேலும், நேற்று சமர்பிக்கபட்ட முன்மொழிவில் அடுத்த 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் ஆறு மாத காலங்களுக்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபைக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.