No exercise No Diet! உடல் எடையை குறைக்க 15 நாட்களுக்கு பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க!
பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், போன்ற பொருட்கள் உடல் எடையை முக்கிய பங்காற்றுகிறது என்பதை பற்றி ஏற்கனவே அறிந்திருப்போம்.
பொதுவாக காரத்தன்மை கொண்ட பொருட்கள் நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பொருட்களில் பூண்டினை பற்றியும் அது எவ்வாறு உடல் எடை குறைய உதவுகிறது என்பதை பற்றியும் பார்ப்போம்.
பூண்டில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும்.
அதேபோல் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை குறைத்து மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.
எனவே உடல் எடை குறைய பூண்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
** முதலில் காலையில் உணவு உண்பதற்கு முன்னால் 2 பல் உரித்த பச்சை பூண்டுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். முதலில் தொடங்குபவர்கள் இவ்வாறு 2 பூண்டிலிருந்து மிக மெதுவாக அதிகரித்து 5 பூண்டு வரை சாப்பிடலாம். 5 பூண்டு வரை சாப்பிடுவது நல்லது. இதற்கு மேல் கூட்டவோ குறைக்கவோ கூடாது. மேலும் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிது வெந்நீரும் சாப்பிட்ட பின்னால் ஒரு டம்ளர் வெந்நீர் பருகுவது நல்லது.
பச்சைப்பூண்டினை சாப்பிடும் பொழுது சிலருக்கு வாயில் புண், வயிற்று எரிச்சல், அல்சர் போன்றவை ஏற்படலாம். அவர்கள் வறுத்தப்பூண்டினை பயன்படுத்துவது நல்லது.
** 5 தோலுடன் கூடிய பச்சைப்பூண்டினை ஒரு வாணலியில் போட்டு தோல் நன்கு கருகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் சுடு தண்ணீர் சிறிது பருகிய பின்னர் பூண்டினை தோலுரித்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக காணலாம்.
பூண்டினை சாப்பிடும் பொழுது ஏதேனும் அதிகமாக வாயில் புண், வயிற்று வலி ஏற்பட்டால் இந்த முறையை நிறுத்தி விடுவது நல்லது.