மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மின்சாதனப் பொருட்களின் பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதாவது குளிர்சாத பெட்டி (ப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்ற அதிகம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களை கொண்டுள்ள வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் தான் உயர்த்தப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது, மீண்டும் மின் கட்டணச் சுமையை மக்கள் தாங்கிக்கொள்ள முடியாது என்பது ஒன்று.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள செய்தியில் குளிர்சாத பெட்டி (ப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்ற அதிகம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களுக்கு வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று தெளிவாக கூறியுள்ளது.

மேலும் இது போன்ற வீடுகளில் தேவைக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இல்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது.