ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் குறைவான விலையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு இடம் தான் நியாய விலைக்கடை.
இங்கு ஒவ்வொரு மாதமும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும், பண்டிகை நாட்களில் மக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் பணம் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களோடு சேர்த்து கரும்பும் வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது.எனவே, மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களுக்கு பெரும்பாலான வகைகளில் உதவும் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் பதினைந்து ஆம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் சில நிர்வாக காரனங்களுக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலாக அடுத்த மாதம் வரக்கூடிய 26 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.