இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

0
290

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு

இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை பார்த்து தான் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனஙக்ளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய தினேஷ் குமார் கடந்த கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துவிட்டு தனது சகோதரருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லையென்றாலும்,  அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதையும் இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

Previous articleவானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?
Next articleதனியார் மதுபான கூடத்தை அப்புறப்படுத்த கோரிய தீர்மானம்! கவுன்சிலர்கள் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here