சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

Photo of author

By Mithra

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் அனைவரும் எவ்வாறு உடை அணிய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் இனி ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள், ஸ்போர்ட்ஸ்  ஷூ அணியக் கூடாது. ஃபார்மல் உடைகள், ஃபார்மல் ஷூ மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்திருக்கக் கூடாது. நன்றாக ஷேவ் செய்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் சேலை, ஃபார்மல் உடைகள், சூட்ஸ் மட்டுமே அணிய வேண்டும். அவர்களும் ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள் அணியக் கூடாது. இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஐ அலுவலகங்களுக்கும் பொறுந்தும் என்றும், அந்தந்த கிளையின் தலைமை உத்தரவை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, சிபிஐ அதிகாரிகள் சிலர் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துகொண்டு, தாடி வைத்துக்கொண்டு சென்றதாகவும், இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது புதிதாக பதவியேற்றுள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால், அதிரடியாக இப்படி உத்தரவிட்டுள்ளதால், அடுத்தடுத்து என்னென்ன மாற்றங்களை செய்யப்போகிறார் எனத் தெரியாமல் சிபிஐ அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.