திமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொள்ள வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள் இதனை தொடர்ந்து சூளகிரி பகுதியில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் கழக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.
அதன் பிறகு அங்கே பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 400 கோடி மதிப்பிலான மருத்துவ கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொண்டு வந்தது அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் கிருஷ்ணகிரியில் பாதி தொகுதியை நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இன்னும் சில மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும். எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் குடும்பமில்லை. நம்மைத்தான் அவர்கள் குடும்பமாக நிலைத்திருந்தார்கள். அதனால் தான் நமக்காக இத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்கள். என்று பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவிற்கு எதிராக சட்டசபையில் வாக்களித்த பன்னீர்செல்வம் எப்படி அதிமுகவிற்கு விசுவாசமாக இருப்பார்? இனி அதிமுகவில் அவரை இணைப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.
வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் பன்னீர்செல்வம். அதிமுகவிலிருந்து விலகிப்போன துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுகவை உடைக்க நினைத்த முதல்வர் ஸ்டாலினின் கனவு நிறைவேறவில்லை. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.
அதோடு எத்தனை வழக்குகளை போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மறுபடியும் ஆட்சியை கைப்பற்றுவோம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் திமுக அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்த்து நிற்க தேம்பும்,திராணியும் அற்றவர் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
அதோடு முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தண்ணீரில் மிதக்கிறது. விடியா திமுக அரசு எப்போது வீட்டிற்குப் போகும் என்று தமிழக முழுவதும் ஒரே குரல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி தான் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.