எத்தன குண்டு போட்டாலும் ஜப்பான அழிக்க முடியாதுடா!!! இணையத்தில் வைரலாகும் ஜப்பான் படத்தின் டீசர்!!!

0
194
#image_title

எத்தன குண்டு போட்டாலும் ஜப்பான அழிக்க முடியாதுடா!!! இணையத்தில் வைரலாகும் ஜப்பான் படத்தின் டீசர்!!!

சர்தார், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் கார்த்தி தற்பொழுது நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் அவர்கள் இயக்கியுள்ளார். இயக்குநர் ராஜூ முருகன் அவர்கள் குக்கு, ஜோக்கர், ஜிப்சி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தோழா, மெஹந்தி சர்கஸ், வர்மா ஆகிய திரைப்படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜப்பான் திரைப்படத்தில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், சுனில், ஜித்தன் ரமேஷ், இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பவானி செல்லதுறை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் ஜப்பான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசை அமைத்துள்ளார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இன்று(அக்டோபர்18) ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது.

தற்பொழுது வெளியாகி உள்ள ஜப்பான் திரைப்படத்தின் டீசரின் கடைசியில் நடிகர் கார்த்தி அவர்கள் கூறும் “எத்தன குண்டு போட்டாலும் ஜப்பானை அழிக்க முடியாது” என்ற வசனம் டீசரின் ஹைலைட் என்று கூறலாம். இந்நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கின்றது.

Previous articleதிரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!
Next article16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா..  – மனம் திறந்த ராஜ்கிரண்!