இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

0
68

சிறையிலிருந்து விடுதலையான பின் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனாலும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முடிவை அறிவித்தார் சசிகலா.அதாவது தான் தீவிர அரசியலில் இருந்து விலக இருப்பதாக ஒரு அறிக்கையை ஒருநாள் இரவு 8 மணி அளவில் வெளியிட்டுவிட்டு அத்துடன் ஒதுங்கிக்கொண்டார் சசிகலா. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் முதல் அவரை பெரிய ஆளுமையாக நினைத்துக்கொண்டிருந்த முக்கிய தலைவர்கள் வரையில் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அவர் அரசியலை விட்டு விலகி அது மட்டும் இல்லாமல் தினகரன் அவர்களையும், அரசியலை விட்டு விலகுமாறு சசிகலா கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்படியே சிறிது காலம் அமைதியாக சசிகலா இருந்து வந்தார். இன்னமும் சொல்லப்போனால் தமிழகத்தில் சசிகலா இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழும் அளவிற்கு அமைதியாக இருந்தார் சசிகலா.

அதன் பின்னர் அதிமுக தொண்டர்கள் உடன் தொலைபேசியின் மூலமாக உரையாடி அவர்களின் ஆதரவை பெறும் விதமாக உரையாடினார். அவருடைய இந்த செயல் அதிமுக தலைமையை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அதிமுக தலைமை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சசிகலாவுடன் உரையாடும் நபர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பு தான் அது.என்னதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட சசிகலாவிடம் உரையாடுவதை அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், விடுவதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நாள்தோறும் அது தொடர்பான ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அதிமுக தலைமை மாபெரும் அதிர்ச்சிக்கு ஆளானது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் முன்கள பணியாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நோய்த்தொற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அதனையடுத்து பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார், அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நீட்தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திராவிடர் முன்னேற்றக் கழகம் ஏமாற்றிவிட்டது. பொதுமக்களின் வாக்குகளை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சியைக் கைப்பற்றியவுடன் திராவிடர் முன்னேற்றக் கழகம் பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதேபோல சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பொதுமக்களிடையே பரப்பினாலும் கூட அதிமுகவை அவரால் அசைக்கக்கூட முடியாது. சசிகலா அதிமுகவில் இருந்த காலத்தில் கூட தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. நோய்த்தொற்று தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீன் அடிக்கவில்லை தொடக்க காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் நோய்த்தொற்று தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.