எத்தனை முறை தலைக்கு குளித்தாலும் சிக்கு வாசனை வீசுதா? இந்த பொருளில் தீர்வு இருக்கு!!
தலையில் வீசும் சிக்கு வாடையை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையானவை:
1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)கற்றாழை ஜெல் – மூன்று டேபிள் ஸ்பூன்
3)எலுமிச்சை சாறு – மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை மூன்றையும் மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பைன் பேஸ்டாக அரைக்க வேண்டும்.
பிறகு இதை தலைமுடியின் மயிர் கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு குளிக்க வேண்டும்.இந்த ரெமிடியை வாரம் இருமுறை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலையில் உள்ள பொடுகு,அழுக்கு,பூஞ்சைகள் நீங்கிவிடும்.
தேவையானவை:
1)இஞ்சி – ஒரு துண்டு
2)எலுமிச்சை தோல் – ஒன்று
3)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
செய்முறை:
முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு எலுமிச்சம் பழத் தோலை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் எலுமிச்சை தோல் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை பிளேவர் தேங்காய் எண்ணெயில் இறங்கும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிக்கு வாடை வீசுவது கட்டுப்படும்.
தேவையானவை:
1)கறிவேப்பிலை இலை – கால் கப்
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் கப் கறிவேப்பிலை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலையில் சிக்கு வாடை வீசுவது கட்டுப்படும்.