எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம்.

சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும் அதேபோல் செலவாகி விடுகிறது என்ற ஆதங்கமும், வருத்தமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது. பணம் கையில் தங்காமல் செலவாகி விடுவதால் அவசரத் தேவைக்காக வெளியில் கடன் வாங்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது.

வாழ்வில் ஒரு முறை கடன் வாங்கி விட்டோம் என்றால் அதை அடைக்கும் வரை நிம்மதி இன்றி தான் அலைய வேண்டும்.இவ்வாறு கடனில் சிக்காமல் பணப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க சில ஆன்மீக வழிகளை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*குங்குமப் பூ

*வெற்றிலை

*பச்சைக் கற்பூரம்

பரிகாரம் செய்யும் முறை…

நம்மை விடாமல் துரத்தும் பணப் பிரச்சனையை சரி செய்ய குங்குமப் பூவை பயன்படுத்த வேண்டும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றால் ஒரு வெற்றிலை எடுத்து அதில் சிறிதளவு குங்குமப் பூ மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து நன்கு மடித்திக் கொள்ளவும்.

இதை வீட்டில் உள்ள பணப் பெட்டியில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆகர்சனசக்தி உருவாக்கி பணத்தை ஈர்க்கும் தன்மை தானாக வந்து விடும். இதனால் அதிகளவு பணத்தை சேமிக்க முடியும். பணப் பெட்டியில் வைத்துள்ள வெற்றிலையை 10 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் மாற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.