இந்த டைமிங்கில் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்களுக்கு தொப்பை போடாதாம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

இந்த டைமிங்கில் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்களுக்கு தொப்பை போடாதாம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!

அன்றாட வாழ்க்கையில் நாள் முழுவதும் ஓடி உழைப்பதால் காலை மற்றும் மதிய உணவை குறைவான அளவு எடுத்துக் கொள்கின்ற நாம் இரவு உணவை மட்டும் வயிறு புடைக்க உண்கின்றோம்.காரணம் நேரமின்மையால் காலை மற்றும் மதிய உணவை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகின்றது.இதனால் வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தேவைக்கு அதிகமாகவே உணவு எடுத்துக் கொள்கிறோம்.

இரவு நேரத்தில் சாப்பிட்ட உடன் உறங்கிவிடுவதால் உடலில் கொழுப்பு உருவாகிவிடுகிறது.காலை மற்றும் மதியம் நீங்கள் குறைவாக சாப்பிட்டு இருந்தாலும் இரவு நேரத்தில் சற்று அதிகமான உணவை வயிற்றுக்குள் தள்ளினால் அவை உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

இரவில் உடல் ஓய்வு நிலையில் இருப்பதால் உட்கொண்ட உணவு செரிமானமாக காலதாமதமாகிறது.சிலர் லேட் நைட்டில் உணவு எடுத்துக் கொள்ள்ளும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இந்த பழக்கம் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆனால் இரவில் வயிறு முட்ட சாப்பிட்டாலும் தொப்பை போடக் கூடாதென்று என்றால் அதற்கு நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் அதாவது 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்னரே டின்னரை முடித்துவிட வேண்டும்.

இதனால் உட்கொண்ட உணவு தூங்கச் செல்வதற்கு முன்னரே செரிமாகிவிடும்.இதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்குவது தடுக்கப்படும்.வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.வயிற்றில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்குவதை தொப்பை என்று அழைக்கிறோம்.இந்த தொப்பையால் சுவாசப் பிரச்சனை,உடல் மந்தம்,இதய நோய்,இரத்த அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரவு உணவை தாமதிக்காமல் உரிய நேரத்தில் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் ஏற்படாமல் இருக்கும்.