என்ன செய்தும் சளி இருமல் குறையலையா? உடனே இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சி பண்ணுங்க!!

Photo of author

By Divya

சமீப காலமாக சளி,இருமல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.சளி,இருமல் வந்துவிட்டால் அதை சரி செய்வதற்குள் பாடாய் பட்டுவிடுவோம்.சில சமயம் சளி,இருமலுடன் காய்ச்சலுடன் தொற்றிக் கொள்ளும்.இந்த பாதிப்பில் இருந்து மீள சில வாரங்கள் ஆகிவிடும்.ஆனால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்பில் இருந்து எளிதில் மீள கீழ்கண்ட வைத்தியத்தை தயக்கமின்றி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாட்டு பால்
2)மஞ்சள் தூள்
3)கருப்பு மிளகு
4)சுக்கு

செய்முறை:-

முதலில் நான்கு கருப்பு மிளகை ஒரு உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு சிறிய துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.

இதையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் நாட்டு மாட்டு பால் ஊற்றி 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடாக்கவும்.

அதன் பிறகு இடித்த கரு மிளகுத் தூள்,மற்றும் சுக்கு தூளை சேர்த்து காய்ச்சவும்.இறுதியாக சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,இருமல்,காய்ச்சல் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)துளசி
3)தேன்
4)வெற்றிலை

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு காம்பு நீக்கப்பட்ட சிறிய வெற்றிலை மற்றும் 10 துளசி இலைகளை நீரில் போட்டு கழுவிக் கொள்ளவும்.

பிறகு ஒரு உரலில் இஞ்சி துண்டு,வெற்றிலை மற்றும் துளசி இலைகளை போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த விழுதை அதில் சேர்த்து 100 மில்லி வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.இந்த கஷாயத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் சளி,இருமல்,காய்ச்சல் முழுமையாக சரியாகும்.