நீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை!
திருநங்கைகள் ஓர் பக்கம் சாதித்து வரும் நிலையில் இன்றும் பலர் பல இடங்களில் காட்டாயமாக காசு வசூல் செய்து தான் வருகின்றனர்.அந்தவகையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் நகர மையபகுதியில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிக்னல்களில் நின்று பணம் வசூலித்து வந்து கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் யாசகம் கேட்டு வற்புறுத்தியும், தாக்கியும் வசூலித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.இதைத்தொடர்ந்து கரூரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இளைஞரை வழி மறித்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் பணம் தர மனம் இல்லாமல் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
இதனால் கோபமடைந்த திருநங்கைகள் அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். இதை கண்ட உள்ளூர் வாசிகள் அவர்களை கண்டித்துள்ளார்கள்.மேலும் வாக்குவாதம் செய்த திருநங்கைகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து கையில் அங்கு இருந்த கட்டைகளை எடுத்து அந்த இளைஞர்களை துரத்தியுள்ளனர்.
இதை கண்ட இளைஞர்கள் பயந்து அங்கு இருந்த ஹோட்டலுக்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ளனர். பின்பு அந்த இடத்திலிருந்து செல்லாமல் ஹோட்டல் முன்பு தகராறு செய்துள்ளனர்.அங்கிருந்த சிசிடிவியில் பதிவான இந்த காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.