பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் பெரியவர்கள் வரை சளி பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள கருப்பு உளுந்தில் சத்தான கஞ்சி செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உளுந்து
2)ஏலக்காய்
3)பனை வெல்லம்
4)திப்பிலி
5)தேங்காய் துருவல்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கப் கருப்பு உளுந்தை உடைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் மிக்ஸி ஜாரை ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வறுத்த கருப்பு உளுந்தை போட்டுக் கொள்ளவும்.அதற்கு அடுத்து இரண்டு ஏலக்காய்,இரண்டு திப்பிலி சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 1/2 கப் பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
பிறகு மற்றொரு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்.2 நிமிடங்கள் கழித்து தண்ணீர் சூடானதும் அரைத்த கருப்பு உளுந்து பொடியை போட்டு கைவிடாமல் கலக்கவும்.
கருப்பு உளுந்து கெட்டி பிடிக்காமல் கொதித்து வர வேண்டும்.பிறகு அதில் காய்ச்சிய பாகு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.தீயை குறைவாக வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி கொதிக்கும் உளுந்து கஞ்சியில் சேர்க்கவும்.உளுந்து கஞ்சி பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.இந்த கஞ்சியை இளஞ்சூட்டில் குடித்தால் நெஞ்சு சளி,காய்ச்சல் பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்