சாதாரண ஜலதோஷத்தை குணமாக்க எந்த ஒரு மருந்தும் தேவையில்லை!! இருக்கவே இருக்க அற்புத நிவாரணி!!

Photo of author

By Divya

மழை மற்றும் பனி காலங்களில் ஜலதோஷம்,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.வெயில் காலம் முடிந்து மழைகாலம் மற்றும் குளிர்காலம் மாறும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஜலதோஷம் ஏற்பட்டால் அன்றாட வேலைகளை செய்வது சிரமமாகிவிடும்.இந்த ஜலதோஷ பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத நிவாரணி தங்களுக்கு உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு
2)நட்சத்திர சோம்பு
3)ஆப்பிள் சீடர் வினிகர்
4)எலுமிச்சை சாறு
5)தேன்

செய்முறை:-

இந்த பொருட்கள் அனைத்தும் நம் வீடுகளில் இருக்கக் கூடியவை தான்.இந்த பொருட்களை வைத்து ஜலதோஷத்தை குணமாக்கும் மூலிகை பானம் ஒன்றை தயாரிக்க போகிறோம்.

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு நட்சத்திர சோம்பு இடித்தது,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இஞ்சி சாறு,நட்சத்திர சோம்புத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகுத் தூள்
2)இஞ்சி சாறு
3)துளசி இலை

செய்முறை:-

முதலில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை தூசு இல்லாமல் சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிரகள அதில் தோல் நீக்கிய இஞ்சி ஒரு துண்டு சேர்த்து விழுதாக்கி கொள்ளவும்.

இதில் இருந்து சாறு எடுத்து 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.