இந்தியர்களின் உடைய முக்கிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் இதனுடைய தேவை. வங்கி கணக்கு திறப்பதில் இருந்து அனைத்து இடங்களிலும் இந்த ஆதார் எண்ணானது கேட்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஆதார் அட்டை கிழிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதைப்பற்றி தற்பொழுது யாரும் பெரிய அளவில் கவலை கொள்வதில்லை. காரணம் ஆதார் எண்ணை வைத்து ஆதார் ஆவணத்தை அதாவது இ சேவை மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை கொடுத்து அதுபோன்ற ஆதாரத்தை பெற்றுக் கொள்கிறோம். இவ்வாறு பெறப்படக்கூடிய ஆதார் ஆவணங்கள் எளிதில் கிழிந்து விடுவதற்கும் மற்றும் சீக்கிரமாக பயனற்று போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
அரசிடம் இருந்து முதன் முதலில் அனைவருக்கும் வழங்கப்பட்ட பிவிசி ஆதார் கார்டு என்பது ஏடிஎம் கார்டை போன்று உறுதியானது மற்றும் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இது போன்ற பிவிசி ஆதார் கார்டுகளை பெறுவதற்கு முதலில் ஆதார் லெட்டர் எனப்படும் UIDAI அஞ்சல் மூலமாக அசல் ஆதார் அதாவது பிவிசி ஆதார் அட்டையினை பெற முடியும். ஆனால் தற்பொழுது நாம் பெறக்கூடிய ஆதாரானது இ ஆதார் அதாவது டிஜிட்டல் வடிவத்தில் நாம் பெறக்கூடிய ஆதார் ஆவணம் ஆகும்.
பிவிசி ஆதார் அட்டையை பெறுவதற்கு பிவிசி ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 50 செலுத்தி ஆர்டர் செய்து கொள்ளலாம். அதற்கு https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் சென்று அதன் பின்பு மை ஆதார் என்பதை தேர்வு செய்து அதன் உள் உங்களுடைய ஆதார் எண் கொடுத்து கேப்சாவை டைப் செய்வதன் மூலம் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் அதனை சமர்ப்பித்து 50 ரூபாய் செலுத்தினால் 15 நாட்களுக்குள் உங்களுக்கு பிவிசி ஆதார் அட்டையானது கிடைத்துவிடும். இவ்வாறு பெறப்படக்கூடிய பிவிசி ஆதார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களுடைய ஆதார் தகவல்களை புதுப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.