உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இது முட்டை,பால்,சிக்கன் போன்ற உணவுகளிலும்,பாதாம்,பிஸ்தா போன்ற விலை அதிகமான பொருட்களிலும்தான் நிறைந்து காணப்படுகிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நம் ஊரில் விலையும் மிகவும் விலை குறைவான சிலவகை உணவுப் பொருட்களில் புரதம் அளவிற்கு அதிகமாக நிறைந்திருக்கிறது.மக்கள் மத்தியில் அதிக விலை கொண்ட பொருள் சத்தானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் உள்ளூரில் கிடைக்கும் மலிவு விலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைஏலமான பார்க்கின்றனர்.
விலை குறைவான புரதச்சத்து நிறைந்த 8 வகை உணவுகள்:
1)வேர்கடலை
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் வேர்க்கடலையும் ஒன்று.இந்த வேர்க்கடலையில் புரதம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையில் மிட்டாய்,லட்டு,வேர்க்கடலை சுண்டல் போன்றவற்றை காலை நேரத்தில் செய்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு புரதச்சத்து அதிகமாக கிடைக்கும்.
2)கிட்னி பீன்ஸ்
சிறுநீரக வடிவில் இருப்பதால் இதை கிட்னி பீன்ஸ் என்று அழைக்கின்றோம்.இந்த பீன்ஸை வேகவைத்து தாளித்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
3)பன்னீர்
மாட்டு பாலில் இருந்து தயாரிக்கும் பன்னீரில் டிஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
4)கருப்பு சுண்டல்
இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக் கடலையை ஊறவைத்து தாளித்து சாப்பிடலாம்.அதேப்போல் இதை முளைக்கட்ட வைத்து பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.அதேபோல் ராஜ்மா என்று அழைக்கப்படும் சிவப்பு பீன்ஸை சுண்டல் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து கிடைக்கும்.
5)சோயா பன்னீர்
சோயா பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டும் சோயா பன்னீரில் சுவையான உணவு செய்து சாப்பிட்டும் உடலில் புரதச்சத்தை அதிகரிக்கலாம்.
6)ராகி
கால்சியம்,புரதம் நிறைந்த சிறு தானியமான ராகியில்(கேழ்வரகு) களி,கூழ் செய்து சாப்பிடலாம்.
7)கருப்பு கவுனி அரிசி
சாதாரண அரிசியை விட கருப்பு கவுனி அரிசி அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இதில் கஞ்சி,பாயசம் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து கிடைக்கும்.
8)கம்பு
சிறந்த சிறு தானிய உணவான கம்பு புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும்.இதை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் போதுமான புரதச்சத்தை பெற முடியும்.