இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

0
206
No more banning them from going here! New order in this district!
No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட 50சதவீதம் ஆபத்தானவை என்று கூறியுள்ளனர்.

தற்பொழுது வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு ஓமைக்ரான் தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் அவருடன் இருந்த 5 பேரையும் தனிமை படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.அதனால் பல மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசியின் முகத்தை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் முக்கிய 18 இடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளார்.

அதேபோல மதுரை மாவட்ட ஆட்சியரும் அம்மாவட்ட மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார்.இதுவரை மதுரையில் 71சதவீதம் பேர் முதல் தவணை செலுத்தியுள்ளனர்.அதேபோல 2ம் தவணை தடுப்பூசி 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.அதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் மதுரையில் உள்ள பொது இடங்களான நியாய விலைக்கடை,வணிக நிறுவனங்கள்,திருமணம் போன்றவற்றிக்கு செல்ல தடை விதித்துள்ளார்.அத்துடன் வங்கிகள் உட்பட 18 இடங்களுக்கு செல்லவும் தடை கோரியுள்ளார்.

அதேபோல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் தடுப்பூசி போடதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் பல கட்டுப்பாடுகளை அம்படுத்தி வருகின்றனர்.இதை பார்க்கும்பொழுது மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதாக மக்கள் பேசி வருகின்றனர்.மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் நடவடிக்கைகள் அனைத்தும் முறைப்படி கடைபிடிக்கும் பொழுது வரும் தொற்றிலிருந்து தனைகளை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Previous articleதமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!
Next articleதீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?