தீவிரமாகும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை! சிக்குகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?

0
110

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறதா என்று பேச்சு அரசியல் வட்டாரங்களில் இருந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் முதல் அரசு உயரதிகாரிகள் வரையில் 3 நாளில் 22 மணிநேரம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கிறார்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு ஒன்பது ஊர் என்ற காவலாளியை கொலை செய்து விட்டு கிருஷ்ணப்பா என்ற காவலாளியை அடித்து மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு அந்த பங்களாவில் இருந்த மூன்று அறைகளை உடைத்து முக்கிய ஆவணங்களை மட்டுமல்லாமல் ஜெயலலிதா விரும்பிய கைக்கடிகாரங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு யானை பொம்மைகள் மற்றும் ஒரு சில பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய போது கேரள மாநில எல்லையில் பிடிபட்ட ஒரு சிலரை தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் கேரள மாநில காவல்துறையினர்.

கடந்த ஒரு சில வாரங்களாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அமைதியான நிலையில் இருந்து வந்ததை எந்தவிதமான முன்னேற்றமும் தென்படாத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது வழக்கு தற்போது தான் சூடுபிடித்து இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்படியான விசாரணை நடைபெறுகிறது என்ற தகவல் வெளியில் தெரியாத அளவிற்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த விசாரணை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஐபிஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒதுக்குப்புறமாக இருக்கும் காவல்துறை அகாடமி பகுதிக்கு ஒரு காக்கா குருவி கூட வராது என்று தெரிவிக்கிறார்கள்.

அங்கே கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. அதோடு மறு நாள் 26 ஆம் தேதி ஒரு நாள் இடைவெளி விட்டு மறுநாள் 27ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் 28ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு பன்னிரண்டு 12 .30 மணி வரையிலும் ஒட்டு மொத்தமாக மூன்று நாட்களில் 22 மணிநேரம் தீவிரமாக விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, எஸ் பி ஆஷிஸ் ராவத் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ் சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தினேஷ் தற்கொலையை விசாரித்து வரும் டிஎஸ்பி சந்திரசேகர் ,ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் உட்பட 20 பேர் மாறிமாறி விசாரணை செய்து துருவி எடுத்து விட்டார்கள்.

கொடநாடு மேலாளர் நடராஜன் மற்றும் ஊழியர்கள், கோடநாடு சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தினேஷ் அவர்களின் சகோதரி மற்றும் உறவினர்கள் கனகராஜ் உறவினர்கள் உள்ளிட்டோர் இடமும் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

அதைவிட முக்கியமான ஒருவரிடம் மணிக்கணக்கில் விசாரணை நடைபெற்றிருக்கிறது அந்த அதிகாரி சைரன் வைத்த அரசு வாகனத்தில் சென்னையில் இருந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. அனேகமாக அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற பதவியில் தான் இருப்பார் என்று தோன்றுகிறது விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில் சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தினேஷ் காதல் பிரச்சனையின் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். கனகராஜ் கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல விசாரணை அறையில் முக்கிய அதிகாரிகளிடம் 5ஜி சுதாகர் சற்று கடுமையாக பேசிக்கொண்டே இருந்தார் என்று சொல்லப்படுகிறது குடாநாட்டில் சம்பவம் நடைபெற்ற உடன் விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் சங்கர் வில்லி வரக்கூடாது என்று எதற்காக தடுத்தார் எஸ்பி முரளி ராம்பா ஏன் தயங்கினார் அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தீவிரமான தொடர் காவல்துறையினரின் விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளங்கோவன் குற்றவாளி வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார். அவரை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குற்றவாளி வளையத்திற்குள் கொண்டு வர போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன எதிர்வரும் ஆண்டில் பொங்கலுக்கு முன்பு எடப்பாடிபழனிசாமி விசாரணைக்கு அழைக்கும் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.