Breaking News

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி!

No more boating in this area! Tourists shocked!

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி!

தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரை ஓரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.மேலும்  அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு சவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment