இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Photo of author

By Rupa

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Rupa

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர்.

திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் கொரோனா தொற்று பரவுவது குறையவில்லை. அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,வார இறுதி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர். இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தொற்று குறையவில்லை.அதனால் இன்று தமிழகச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முக்கிய ஆலோசனைகூட்டம் நடத்த உள்ளார்.

இதில் கொரோனா குறித்து கட்டுப்பாடுகளும்,மேற்கொண்டு முழு ஊரடங்கு போடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என பேசி வருகின்றனர்.இதில் சுகாதரத்துறை ஊழியர்கள்,இதர பணியாளர்களும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.ஆலோசனையின் முடிவில் முழு ஊரடங்கு போடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.கொரோனா தடுப்பூசி மக்கள் போட்டுக்கொளும்படி வலியுறுத்த சில முடிவுகள் எடுப்பதாகவும் கூறுகின்றனர்.