வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

0
61

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தபால் வாக்குகளை மே மாதம் 1ஆம் தேதியை வரிசைப்படுத்தி விட தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனை அடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை சந்தித்து ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்.அந்த மனுவில், அவர் தெரிவித்திருப்பதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்கு எண்ணும் தினத்தில் மட்டுமே தபால் வாக்குகளை என்ன வேண்டும், அதற்கு முன்னதாகவே அது என்ன படக்கூடாது சென்ற கால வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கும் பட்சத்தில் மே மாதம் ஒன்றாம் தேதியே தபால் வாக்குகள் தொடர்பான கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க இருப்பதாக ஒரு சில மாவட்டங்களில் இருந்து எங்களுடைய கட்சியினர் புகார் அளித்திருக்கிறார்கள். ஆகவே யாரும் எந்த குறையும் சொல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.வாக்கு எண்ணிக்கையில் மேசைகள் குறைக்கப்பட கூடாது என அவர் தெரிவித்திருக்கிறார்.