இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு!
ஜனநாயகத்தின் நான்காவது தூணும் தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட சட்டத்தின் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவலறியும் உரிமைச் சட்டத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை நமது தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர் சங்கம் துணிவுடன் தொய்வின்றி செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளையும் கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட அரசை வலியுறுத்துகிறோம்.அதனால் நமக்கு கிடைப்பது என்ன (1) பழிவாங்கப் படுகிறோம் (2) கொலை மிரட்டலுக்கு ஆளாகிறோம் (3) படுகொலை செய்யப்படுகிறோம் (4) நம் மீது பொய் வழக்கு பதியப் படுகிறது (5) அவதூறு வழக்கில் அவதிப்படுகிறோம் (6) நாம் மட்டுமின்றி நமது குடும்பத்தாரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் .
இதே நிலை இனிமேலும் நீடிக்க கூடாது என்பதற்காகவே நாம் இன்று நமக்கு அதாவது சாமானிய மக்களும் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வேலேயை செய்துகொண்டிருக்கும் ஆர்.டி.ஐ ஆர்வலர்களும் ஆங்காங்கே நடக்கும் தவறுகள் அரசு திட்டங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள கடும் வெயில் மழை பேரிடர் காலங்களிலும் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் களத்தில் நின்று மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களும் ஒன்று சேர்ந்து இன்று தமிழக அரசுக்கு முக்கியமான ஒரே கோரிக்கை.