உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்!

0
53
Your son is going to jail, come and see him! The police who showed rudeness!
Your son is going to jail, come and see him! The police who showed rudeness!

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்!

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சக மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட ஆசிரியர்கள் இரு மாணவரையும் அழைத்து கண்டித்து பள்ளி முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3.4.2022 அன்று அதிகாலை 5 முப்பது மணிக்கு மூன்று காவலர்கள் ரோந்து வாகனத்தில் வந்து தூங்கி கொண்டிருந்த 13வயது பள்ளி மாணவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டு கதவை தட்டி அவரது தாய் தந்தையர் கண் முன்பே மாணவனை மட்டும் வண்டியில் ஏற்றி பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது எதற்காக என் பிள்ளையை அழைத்து போறிங்க என்று மாணவரின் பெற்றோர் கேட்டதற்கு உன் பிள்ளை ஜெயிலுக்கு போக போறான் ஜெயில்ல வந்து பார்த்துக்கோ என்று மிரட்டிவிட்டு மாணவனை சட்ட விதிகளை மீறி வலுக்கட்டாயமாக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு ரோந்து வாகனத்தில் வந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவனை சிறார் சட்ட விதிகளுக்கு முரணாக மாணவனை குற்றவாளியை போல் நடத்தி தனி அறையில் வைத்தனர்.அத்து மீறி நடந்து சட்டத்தை மீறி நடந்து கொண்ட பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தயாள்,உதவி ஆய்வாளர்கள் கபிலன் மற்றும் உளவுத்துறை காவலர் டோம்னிக் ஆகியோர் மாணவனின் தாய் தந்தையிடம் உன் மகனின் மீது வழக்கு பதிவு செய்து விட்டோம் நீ அவனை ஜெயிலில் போய் பார்த்துக்கோ உன் மகனை ஜாமீனில் எடுத்துக்கொள் காவல் நிலையத்துக்குள் நீங்களும் நீங்கள் அழைத்து வந்திருக்கும் வழக்கறிஞர்களும் உள்ளே வரக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் மாணவனின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை விசாரிக்கச் சென்ற வழக்கறிஞர்களை காவல் நிலையத்தில் உள்ள உளவுத்துறை காவலர் டோமினிக் என்பவர் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசியுள்ளார் இதுகுறித்து பல்லாவரம் உதவி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்காததால் இன்றைய 30க்கும் மேற்பட்ட டாக்டர் அம்பேத்கர் சட்டப் படிப்பு வாசகர் வட்டத்தின் வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது