இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி? உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் பட்டியல் சமூகத்தினர் கலந்துக்கொள்ள கூடாது என கூறியிருந்த வழக்கில் ,தனி நீதிபதி அனைவரும் கலந்துக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்தது. அதில் நீதிபதி கூறியது, கோயில் என்பது பக்தியுள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்று. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும் கோயிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. அதே போல சாதி, நிறம் நம்பிக்கை சார்ந்த பாகுபாடும் கூடாது. இவ்வாறு வேறுபாடு காட்டி பிரிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனால் இந்த கும்பாபிஷேக விழாவில் பட்டியல் இன சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் என அனைவரும் கலந்து கொண்டு தான் விழா நடைபெற வேண்டும் என கூறினார்.இதில் வேறுபாடு காட்டக்கூடாது என்றால்,அனைவருக்கும் பொதுவான தரிசனம் செய்யவே அனுமதி வழங்க வேண்டும்.சிறப்பு தரிசனம் ரத்து செய்ய வேண்டும் என மக்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.