இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த முடியாது!! மீறினால் தண்டனை!!

Photo of author

By Gayathri

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானியம் மற்றும் இலவசமாக உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சக்கரை,பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசின் சார்பாக நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மளிகைக்கடைகளில் விறக்கக்கூடிய டீத்தூள், உப்பு, உளுந்து, சோப், மைதா, ரவை போன்றவை மக்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தீபாவளி மளிகை தொகுப்பானது விநியோகம் செய்யப்பட்டது.தற்போது விற்பனை செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து கையிருப்பில் உள்ள மீதமுள்ள பொருட்களை கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது. இந்த நிலையில் சிறப்பு தொகுப்பில் விற்பனை ஆகாமல் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளுக்கு வரும் மக்களிடம் கட்டாயப்படுத்தி பொருட்களை வைக்கக்கூடாது என்று கூறியதுடன் மட்டுமின்றி ரேஷன் கடைகளில் இது குறித்த நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.