இனி கண்ணாடி தேவையில்லை!! கழுகு போல பார்வை தெரிய இந்த கீரை ஒன்றே போதும்!! 

0
236
#image_title

இனி கண்ணாடி தேவையில்லை!! கழுகு போல பார்வை தெரிய இந்த கீரை ஒன்றே போதும்!!

 

கண் குறைபாடு உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் முலம் அருமையான தீர்வை தெரிந்து கொள்ளலாம். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எத்தனையோ மருந்துகளை எடுத்து கண்களுக்கு பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அந்த மருந்து எதுவும் உங்கள் கண் பார்வை குறைபாட்டை குணப்படுத்திருக்காது. இந்த பதிவில் மணத்தக்காளியை வைத்து தைலம் தயாரித்து எவ்வாறு கண்பார்வை குறைபாட்டை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

 

இந்த மணத்தக்காளியை பயன்படுத்தி கண்பார்வை குறைபாட்டை சரி செய்யலாம். சைனஸ் பிரச்சனையை சரி சொய்யலாம். வெரிகோஸ் வெயின் நோயை சரி செய்யலாம். மேலும் உடலில் ஏற்படும் பலவகையான வலிகளையும் குணப்படுத்தலாம்.

 

மணத்தக்காளியின் நன்மைகள்…

 

* இந்த மணத்தக்காளி கிரையை அப்படியே வதக்கி சாப்பிட்டால் நாக்கில் இருக்கும் புண் முதல் எருவாய் புண் வரை அனைத்தும் குணமாகும். அதுமட்டுமில்லாமல் பெருகுடல், சிறுகுடல், மலக்குடல் புண்களையும் இது குணப்படுத்தும்.

 

* மணத்தக்காளி கீரையை விதை, இலை, காம்புடன் வைத்து இடித்து ஒரு துணியில் கட்டி நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 100 மிலி சாறு எடுத்தால் அதை 200 மிலி நல்லெண்ணெயில் சேர்த்து லேசான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இதை தினமும் காலையில் நம் தலைக்கு தேய்த்து வரவேண்டும். பிறகு இதனுடன் ஆண்டவர் தையிலத்தை கண்ணில் ஊற்றி வந்தால் கண் பார்வை கழுகு போல தெரியும். இதை தலைக்கு தேய்த்து பிறகு தலைக்கு குளித்து விடலாம். தலைக்கு குளிக்க விருப்பம் இல்லாதவர்கள் அப்படியே விடலாம். பெண்கள் தினமும் இதை தலைக்கு பயன்படுத்தலாம்.

 

* இந்த தைலத்தை நாம் வாய் வழியாக சாப்பிடும் பொழுது நமக்கு ஏற்படும் பாத எரிச்சலை குணப்படுத்தும்.

 

* நின்று கொண்டு வேலை செய்யும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் வெரிகோஸ் வெயின் நோயை இது குணப்படுத்தும். வெரிகோஸ் வெயின் நோய் உள்ளவர்கள் இந்த தைலத்தை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பிறகு வெரிகோஸ் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இரத்த குழாய் அடைப்பு வேகமாக குணமாகும்.

 

கழுகு போல பார்வை தெரிய உதவும் மணத்தக்காளி கீரை தைலம் தயாரிக்கும் முறை…

 

மணத்தக்காளி கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கடாயில் அரைத்து எடுத்து வைத்துள்ள மணத்தக்காளி கீரை சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இதில் 200 மிலி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். 100 மிலி சாறுக்கு 200 மிலி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கறுக விடாமல் லேசானா தீயில் கிண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 

சிறிது நேரம் கொதிக்க வைத்து அதாவது அதில் உள்ள நீர்ச்சத்து போகும் வரை கொதிக்க வைத்து பின்னர் இதை இறக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதை காற்று புகாத ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

 

இந்த தைலத்தை தினமும் காலையில் சிறிதளவு தலைக்கு தேய்த்து வர வேண்டும். இதை சிறிதளவு சாப்பிட்டும் வந்தால் மூலம் நோய் ஏற்படாது. வாய் முதல் ஆசன வாய் வரை உள்ள புண்கள் அனைத்தும் குணமாகும். கண்பார்வை தெளிவாக மாறும். இதை தலைக்கு தேய்க்கும் பொழுது கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கபாலத்தில் உள்ள நீர் முற்றிலும் வேளியேறும்.

 

மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்த சக்கையை துவையலாக செய்து நாம் அளவோடு சாப்பிடலாம். அளவோடு சாப்பிடும் பொழுது பல நன்மைகள் நம்உடலுக்கு கிடைக்கின்றது.

Previous articleதினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா??
Next articleடிப்ரசனில் இருந்து வெளிவர இதை ஃபாலோ பண்ணுங்க!!