இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வீடு தேடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பொழுது ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி சென்று வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றை நம்முடைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின் தமிழகத்திலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதனுடைய முதல் கட்டம் தான் சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் நேரடியாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலை கிராமமான வெள்ளக் கவியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கிராமம் சரியாக கொடைக்கானலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் அங்கு சாலை வசதி கூட இல்லாத காரணத்தால் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் ஒத்தையடி பாதையில் நடந்து வந்த வாங்க வேண்டி உள்ளது என்றும் அந்த ஒத்தையடி பாதையில் பல்வேறு ஆபத்துகளையும் சவால்களையும் சமாளிப்பது ஆகவும் வெளியான தகவல்களின்படி, தற்பொழுது அந்த கிராமத்திற்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதோடு கூடவே சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இதற்காக தாங்கள் போராடி வருவதாகவும் அரசிற்கு பல கோரிக்கைகள் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.