இனி போலீசாருக்கு விடுமுறை இல்லை!! காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் சில ஒத்திகை நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது முதலாவதாக ஆகஸ்ட் 7 ம் தேதி அதாவது இன்று தொடங்க உள்ளது.
இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது.சென்னை முழுவதும் இன்று அனைத்து காவல் அதிகாரிகளும் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் உடனடி தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் அவசியம் இன்றி 10 நாட்களுக்கு விடுமுறை இல்லை என்று உத்ரவிடப்படுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து சுதந்திர தினம் முடியும் வரை காவல்துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கூடாது என்றும் முழு வீச்சுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.