விவாகரத்து பெற இனி சட்ட விதிமுறைகள் இல்லை! ஹை கோர்ட் போட்ட புதிய உத்தரவு!!
இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிருஸ்தவ தம்பதியினர் ஓர் ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பின்பே விவாகரத்துக்கு விண்ணபிக்க முடியும் என்ற சட்ட விதிமுறையை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
தம்பதியினர் இருவரும் மனம் ஒத்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிருஸ்தவ தம்பதியினர் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் அதன் பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர் என்ற விதிமுறை சட்டத்தில் உள்ளது. இதை ஓராண்டாக குறைத்து 2010-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இருவரும் மனம் உவந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் நிலையில் இந்த ஓராண்டு காலமும் தேவை இல்லை என அதை ரத்து செய்வதாக கேரள நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.