மயோனைஸ் அசைவ மற்றும் சைவ பியர்களளால் விரும்பி உண்ணக்கூடிய உணவு பொருளாக இருந்து வருகிறது . சிக்கன் முதல் தந்தூரி வரை உள்ள இறைச்சிகளின் மெயின் டிஸ்க்கு முதன்மை சைடிஷ் சாக மயோனைஸ் இருந்து வருகிறது . இந்த நிலையில் தான் “மயோனைஸ், மனிதர்கள் உண்ணத் தகுந்தது அல்ல” என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தந்து உள்ளது உணவு பாதுகாப்பு துறை.
முட்டைகளை கொண்டு தயாரிக்கும் “மயோனைஸ் களை தடை செய்யுமாறு தெலுங்கான அரசுக்கு உணவு பாதுகாப்பு துறை பரிசீலனை செய்து இருப்பது மயோனைஸ் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மயோனைஸ் கலந்த சவர்மா , சிக்கன் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறதை சுட்டிக்காட்டியுள்ளது, உணவு பாதுகாப்புத்துறை. சில காலங்களுக்கு முன் சவர்மாவை உண்டு ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
இதனால் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டைகளை கொண்டு உருவாக்கப்படும் இந்த மயோனைஸ் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். மேலும் சுகாதாரமற்ற முறையில் மயோனைஸ் தயாரிப்பது இதற்கு காரணம் ஆகும் .